இடுகைகள்

குற்ற மனம்

             செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைப்பதுண்டு.   இது நியதி.   ஆனால் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டனை சிற்சில சமயம் கிடைப்பதுண்டு.   இதில் செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைப்பதால் பயனொன்றும் இல்லை.   தாம் செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைத்ததால், அதை அதற்குப் பரிகாரமாக நினைத்து மீண்டும் குற்றம் புரிய அவன் மனம் தயங்குவதில்லை.   ஆனால், செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்தவன்தான் உண்மையான மனிதன். இவன் குற்றம் செய்ய நினைத்தாலும் அவனது உள்மனம் தடுக்கும்.

வாழ்க்கைத் தத்துவம்

             ஒரு கதையில் இன்பம் துன்பம் மாறி வருவதுபோல் வாழ்க்கையில் அமையும்.   கதையில் முதல் வரியைப் படித்துவிட்டு முழுக் கதையையும் நிர்ணயிக்க முடியாது.   ஒரு பத்தியைப் படித்த பிறகும் அதை உணரமுடியாது.   பாதி கதையைப் படித்த பிறகாவது சில கதைகளை நிர்ணயம் செய்யலாம்.   ஆனால், சில கதைகளில் கடைசி வரி வரை நிர்ணயம் செய்ய முடியாது.   சில கதிகளைல் கடைசி பத்திவரை ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம் என்று நினைக்கத் தோன்றும்.   ஆனால், கடைசிப் பத்தியில் ஒரு திருப்பத்தையே ஏற்படுத்திக் காட்டும்.   இதுபோலத்தான், வாழ்க்கையும்.   பிறந்ததுமே யாரும் உலகத்தை அறிவது இல்லை.   வளரும் போதும் உணர முடிவது இல்லை.   வாழும்போதுதான் நிலையை உணருகின்றான்.   அப்போதுதான் இன்ப துன்பங்களுக்கிடையே உழலுகின்றான்.   சிலர் கடைசி வரை இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வாழ்வர்.   கடைசியில் உண்மை தெரிந்ததும் தன் முடிவை மாற்றிக் கொள்வர்.   சிலர் பாதியிலேயே வாழ்க்கையின் தத்துவத்தை உணருவார்.   சிலர் வாழ்வின் ஆரம்பத்தில...

ஆய்வுக் கரு

            ஒருவன் எதைப் பற்றி ஆய்வு செய்ய எண்ணமிடுகிறானோ, அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி அக்கருவைச் சுற்றி அமைந்திருக்கும் கதையை எழுதும்போது அதன் உட்பொருளில் மறைந்து கிடக்கும் கலை அம்சங்கள் தானாக வெளிப்பட்டு ஆராய்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் தரும். எது? அந்தக் கரு வட்ட எழுத்துக்களை எழுதுவதால்.

ஆலமரம்

            ஆலமரம் தன்னால் முடிந்தவரை தன் வேரால் வாழ்கின்றது.   பின் அது வாழ்ந்துக்கொண்டு இருக்கும் போதே விழுதுகளை விடுகின்றது.   தன் சக்தி, தன் மகிமை குன்றும் இடத்தில் விழுதுகள் வேராக பரிணமிக்கின்றன.   அதுபோலத்தான், ஒருவனுடைய வாழ்க்கையும் அமைய வேண்டும்.   பிறந்து வளர்ந்து இறப்பதாக இல்லாது, பிறந்து வாழும்போது பல நல்ல படைப்புக்களையோ நல்ல செயல்களையோ செய்தால்தான் அவன் உடல் மறைந்தாலும் விழுதுபோல் நிற்கும்.   அவனது கொள்கைகள், படைப்புக்கள் ஆல் நிழல்போல் மக்களுக்குப் ப யன்பட்டு என்றும் அழியா ஒரு நிலையை அவனுக்கு இவ்வுலகம் தரும்.

இறை பெருமை

            இறைவன் முழுமுதற் பொருளாகும்.   வாழைப் பழத்தைப் போல, ஒருவன் கனியை உண்டு தோலை வேறொன்றுக்குப் பயன்படுத்துகின்றான்.   இன்னொருவனோ தோலின் மதிப்பு அறியாமல் கனியை மட்டும் உண்டு தோலை வீசி விடுகின்றான்.   எனவே, இறைவனின் பெருமையை அறியாதோர் வெறுக்கின்றார்.

இறையருள்

             கை நிறைய மிட்டாய் வைத்திருக்கும் குழந்தையிடம் மிட்டாய் கொடு என்று கேட்டால் எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொடுப்பதில்லை.   தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கொடுக்கும்.   ஆனால், வேண்டியவரின் சிபாரிசு இருந்தால் வேண்டப்படாவர்க்கும் மிட்ய் கிடைக்கும்.   இறைவனிடம் இறைய அருள் இருக்கின்றது.   அவருக்குத் தீங்கு செய்பவர்களுக்கும் அருள் கிடைக்க வேண்டுமானால் அருள் பெறும் இயல்பினைப் பெற்றோர் அவர்களுக்காகவும் சிபாரிசு செய்தல் வேண்டும்.

இழைபோல் மக்கள்

             நெசவு செய்பவன் பாவு இழையையும் ஊடை இழையையும் இணைக்கின்றான். அதன் மூலம் துணியைப் பெறுகின்றான்.   வாழ்க்கையிலும் பாவு இழை போன்ற ஆண்மகனோடு ஊடை இழை போன்ற பெண்மகள் வந்து இணைவதால் வாழ்க்கை என்னும் துணி பெறப்படுகிறது.   இந்த இரு இழைகளும் இணையாமல் தனித்தனியாக இருக்குமானால் அதற்கு இந்த உலகில் மதிப்பில்லை.   மக்களும் ஒருவருடனொருவர் இணைந்து வாழவில்லை யானால் தனிப்பட்ட இழை இருந்து என்ன பயன்?                     இழையொன்று தனித்து இருக்கலாம்.  அப்போது அதைப் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும்.  ஐம்புலன்களை அடக்கிப் பரம்பொருளையே நினைத்துக் கொண்டு இருப்பவன் ஞானி ஆகின்றான்.  ஞானியான பிறகு, அவன் எல்லாம் அவனே என்று தனித்து இருக்கலாம்.  அப்படி இருப்பது பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்.  ஆனால், இறைவனால் பெறப்பட்ட ஞானம் வீணாய் அன்றோ போகும்.  எனவே, ஞானி அஞ்ஞானியோடு கலந்து அஞ்ஞானிகளை ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்ல...