ஆலமரம்

         ஆலமரம் தன்னால் முடிந்தவரை தன் வேரால் வாழ்கின்றது.  பின் அது வாழ்ந்துக்கொண்டு இருக்கும் போதே விழுதுகளை விடுகின்றது.  தன் சக்தி, தன் மகிமை குன்றும் இடத்தில் விழுதுகள் வேராக பரிணமிக்கின்றன.  அதுபோலத்தான், ஒருவனுடைய வாழ்க்கையும் அமைய வேண்டும்.  பிறந்து வளர்ந்து இறப்பதாக இல்லாது, பிறந்து வாழும்போது பல நல்ல படைப்புக்களையோ நல்ல செயல்களையோ செய்தால்தான் அவன் உடல் மறைந்தாலும் விழுதுபோல் நிற்கும்.  அவனது கொள்கைகள், படைப்புக்கள் ஆல் நிழல்போல் மக்களுக்குப் ப யன்பட்டு என்றும் அழியா ஒரு நிலையை அவனுக்கு இவ்வுலகம் தரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறையருள்

புதியனவும் ஏற்றோம்