வாழ்க்கைத் தத்துவம்
ஒரு கதையில் இன்பம் துன்பம் மாறி வருவதுபோல் வாழ்க்கையில் அமையும். கதையில் முதல் வரியைப் படித்துவிட்டு முழுக் கதையையும் நிர்ணயிக்க முடியாது. ஒரு பத்தியைப் படித்த பிறகும் அதை உணரமுடியாது. பாதி கதையைப் படித்த பிறகாவது சில கதைகளை நிர்ணயம் செய்யலாம். ஆனால், சில கதைகளில் கடைசி வரி வரை நிர்ணயம் செய்ய முடியாது. சில கதிகளைல் கடைசி பத்திவரை ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், கடைசிப் பத்தியில் ஒரு திருப்பத்தையே ஏற்படுத்திக் காட்டும். இதுபோலத்தான், வாழ்க்கையும். பிறந்ததுமே யாரும் உலகத்தை அறிவது இல்லை. வளரும் போதும் உணர முடிவது இல்லை. வாழும்போதுதான் நிலையை உணருகின்றான். அப்போதுதான் இன்ப துன்பங்களுக்கிடையே உழலுகின்றான். சிலர் கடைசி வரை இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வாழ்வர். கடைசியில் உண்மை தெரிந்ததும் தன் முடிவை மாற்றிக் கொள்வர். சிலர் பாதியிலேயே வாழ்க்கையின் தத்துவத்தை உணருவார். சிலர் வாழ்வின் ஆரம்பத்திலேயே உணருவார்.
கருத்துகள்
கருத்துரையிடுக