இழைபோல் மக்கள்
நெசவு செய்பவன் பாவு இழையையும் ஊடை இழையையும் இணைக்கின்றான். அதன் மூலம் துணியைப் பெறுகின்றான். வாழ்க்கையிலும் பாவு இழை போன்ற ஆண்மகனோடு ஊடை இழை போன்ற பெண்மகள் வந்து இணைவதால் வாழ்க்கை என்னும் துணி பெறப்படுகிறது. இந்த இரு இழைகளும் இணையாமல் தனித்தனியாக இருக்குமானால் அதற்கு இந்த உலகில் மதிப்பில்லை. மக்களும் ஒருவருடனொருவர் இணைந்து வாழவில்லை யானால் தனிப்பட்ட இழை இருந்து என்ன பயன்?
இழையொன்று தனித்து இருக்கலாம். அப்போது அதைப் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஐம்புலன்களை அடக்கிப் பரம்பொருளையே நினைத்துக் கொண்டு இருப்பவன் ஞானி ஆகின்றான். ஞானியான பிறகு, அவன் எல்லாம் அவனே என்று தனித்து இருக்கலாம். அப்படி இருப்பது பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். ஆனால், இறைவனால் பெறப்பட்ட ஞானம் வீணாய் அன்றோ போகும். எனவே, ஞானி அஞ்ஞானியோடு கலந்து அஞ்ஞானிகளை ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். ஞானி அஞ்ஞானியோடு கலந்து அஞ்ஞானியாக மாறுதல் கூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக