மனம்
ஒருவன் மது அருந்திவிட்டு தள்ளாடிச் செல்கின்றான். அதை மற்றொருவன் பார்க்கின்றான். பிறகு தானொரு நாள் மது அருந்துகின்றான். அப்பொழுது முன்னொரு நாள் மது அருந்திவிட்டு இருந்த அவனின் நிலையை எண்ணிப் பார்க்கின்றான். இவனுக்கு அதுபோல வருகின்றா என்று நினைத்துக் கொண்டு இருப்பான். நாம் அருந்தியதின் அளவு போதவில்லையா? என்றும் அவன் எண்ணம் சூழ்ந்து கொண்டிருக்க குடித்த உடனே ஆட்டம் உண்டாகுமே எண்ணத்தில் அவன் மனது ஐக்கியமாகி விட்டதால், பின் அவன் நடக்கும்போது அவன் மனது அவனின் எண்ணத்திற்குத் தகுந்தாற்போல் உணர முடிகிறது. அதுபோலத்தான், எவன் ஒருவன் ஒன்றின் மீது மனதை ஒருமுகப் படுத்துகின்றானோ, அதை நிச்சயம் அடைய முடியும். அதாவது, மனதை ஒருமை ஆக்கினால் எதையும் காணலாம். நாம் நிலவை நினைத்து மனதை ஒருமுகப்படுத்தினால் நிலவின் விளக்கம் நாம் உணரலாம். ஒருவன் பக்தியில் தனது மனதை ஈடுபடுத்தினால் அதன் மூலம் அவன் பிறப்பு முக்தி பெறுகின்றது.
பக்தியின்
விளக்கம் சக்தி அளிக்கும்
சக்தியின்
விளக்கம் முக்தி அளிக்கும்
மருத்துவன் ஒருவன்
இந்த மருந்து சாப்பிட்டால் இந்த நோய் தீர்ந்து விடும் என்று சொல்லி மருத்துகளைத் தருகின்றான். நோயாளி அந்த நோய்க்கான மருந்தினைக் குறிப்பிட்ட
கால அளவுடன் அருந்துகின்றான். நாம் மருந்து சாப்பிட்டுவிட்டோம் இனி நமக்கொரு கவலையுமில்லை,
நமக்கு வைத்தியம் செய்தவர் இந்த தொழிலில் அனுபவம் மிக்கவர் என்ற நம்பிக்கையில் அமைதி
பெறுகின்றான். அவ்வாறே அவன் மனது நம்பிக்கையில்
ஒருமுகப்படுத்தி அமைதி பெற்றுள்ளதால் கண்ட வியாதி காணாது போகும். அதுபோலத்தான், இறைவனை முழுதாக நம்பியவர்கள் இறைவனைக்
காண்பவர்கள். இறைவனை எவ்வாறு காண்பது? ஐயமிட்டெழும்
கேள்வி, நல்மனதுடையோர் காணும் கனவுகள் எல்லாம் இறைவனின் கட்டளை அறிவிப்பே. இந்த முறையிலேதான் சமயக் குரவர்கள் இறைவனைக் காணலாம் என்றனர். இறைவனுக்கு உருவில்லை. காற்றுக்கும் உருவில்லை. அது, நல்லோரையும் தீயோரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அதுபோலத்தான், இறைவன் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாம் நம் மக்கள் என்று நினைத்து அவனவன் மனதுக்கேற்ற
கட்டளைகளைக் கனவுகள் மூலம் உணரச் செய்கின்றான்.
அவ்வாறு, அவன்
மனதுக்கேற்ற கட்டளை இடுவதால்தான் இன்று நாத்திகர்கள் ஆத்திகர்கள் தோன்றியுள்ளனர். இறைவனின் திருவுளம் சமயத்தைப் பரப்ப எண்ணியது போலும். எதிர்ப்பு இருந்தால்தான் ஒன்று நிலைபெற முடியும். சிறிய கல்லால் ஆணியை மரத்தில் பொருத்துகின்றோம். அப்போது மரத்தில் ஆணியை வைத்துக் கல்லால் தட்டும்போது
ஆணி மரத்தில் பொருந்திக் கொள்கிறது. அதேபோலத்தான்,
எதில் ஒன்றில் மனம் ஈடுபட்டுவிட்டதோ அது ஆணியாகிவிடுகின்றது. இந்த ஆணி மரமென்ற இந்த உடலில் மனம் வெறுத்த ஒரு
கருத்து கல்லாகக் குத்தும்போது மரமென்ற உடலில் மன ஈடுபாடுடைய ஆணியானது மன ஈடுபடா கல்லால்
தட்டும்போது மன ஈடுபாடுடைய ஆணியும் உடம்பும் பொருந்திக் கொள்ள மன ஈடுபடா கல் தனித்து
நின்றுவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக