புதியனவும் ஏற்றோம்

            ஒரு பெண் ஐந்தாவது குழந்தையை ஈன்றெடுக்கின்றாள். அந்த ஐந்தாவது குழந்தையிடம் மிகுந்த அன்புடன் பராமரித்து வருகிறாள்.  ஐந்தாவது குழந்தையிடம் அதிகப் பற்றுதல் இருப்பதினாலேயே அத்தாய்க்கு மற்ற நான்கு குழந்தைகளின் மீது அன்பும் பராமரிப்பும் விட்டுவிடுவதில்லை.  அவளுக்கு அவர்களிடமும் அன்பும் பராமரிப்பும் உண்டு.  ஆனால், அதை அவள் அதிகம் வெளியுலகிற்குக் காட்டாமல் தன் இளைய, ஐந்தாவது குழந்தையை நல்முறையில் வளர்க்கவே எத்தனித்திருப்பாள்.  ஏனெனில், வளர்ந்த பிள்ளை இனித் தானாக வளரும், வளரும் பிள்ளையை வளர்த்தாக வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அத்தாயிடம் இருக்கும்.  தன்னால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நலமுடனும், நெறி தவறாதவர்களாகவும், பிழை தெரியாதவர்களாகவும், நிலைத்த பேருடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இருப்பதனால், அவ்வெண்ணம் போலவே அடுத்த குழந்தையையும் வளர்த்துவிட நினைக்கின்றாள். 

அதுபோலத்தான், இலக்கியத்திலும் பல வடிவங்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளன.  வளர்ந்துக் கொண்டும் இருக்கின்றன.  வளர்ந்ததை நிலைநாட்டி, வளர்வதை வளர்க்க வேண்டும்.  வளர்ந்ததையே நினைத்துக் கொண்டு இருந்தால்  வளரும் இலக்கியங்களின் நிலை என்னவாகும்.  பிறந்த குழந்தையை பராமரிக்காத நிலையில் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுவதால் பழைய இலக்கிய வடிவங்களின் புகழ் மண்டிவிடும் என்று நினைப்பது தவறு.  அது முறை தவறி வளர்க்கப்பட்டதாயின் உண்மையாகும்.  தன்காலில் நின்றும் தகுதி பெற்றபின் அது தானே வளரும் என்பதில் ஐயமில்லை.  எனவே புதிய வடிவத்தையும் ஏற்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறையருள்

ஆலமரம்